இந்தியா
துருக்கிக்கு உதவியை அறிவித்த இந்தியா.. உண்மையான நண்பனை ஆபத்தில் அறிந்து கொள்ளலாம் என்ற துருக்கி தூதர்!

துருக்கியில் ஏற்பட்ட அடுத்தடுத்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கட்டிடங்கள் இடிந்து விழுந்து இறந்துள்ளன.
இந்நிலையில் துருக்கிக்கு உடனடியாக உதவ பல்வேறு நிவாரணம் பொருட்களை இந்திய அரசு, விமானப் படை விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.

Indias Relief To Turkey
அதில் நில நடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கித் தவித்து வருபவர்களை மீட்பதற்காகக் குழு, மிகவும் திறமையான நாய்க் குழுக்கள், மருத்துவப் பொருட்கள், மேம்பட்ட துளையிடும் கருவிகள் மற்றும் உதவி முயற்சிகளுக்குத் தேவையான பிற முக்கியமான கருவிகள் போன்றவை அனுப்பப்பட்டுள்ளன.

துருக்கிக்கு முதல் ஆளாக வந்து உதவி செய்துள்ள இந்தியாவின் அறிவிப்பைக் கேட்டு நெகிழ்ந்த, இந்தியாவுக்கான துருக்கி தூதர், உண்மையான நண்பனை ஆபத்தில் அறிந்து கொள்ளலாம். இந்தி, துருக்கி இரண்டு மொழிகளிலும் தோஸ்தி என்பது நண்பரைக் குறிக்கும் என டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
சமீபத்திய தகவல்களின்படி, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் இதுவரை 4,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. 7.8, 7.6 மற்றும் 6.0 ரிக்டர் அளவுகோலில் தொடர்ந்து மூன்று பேரழிவுகரமான நிலநடுக்கங்களால் துருக்கி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












