தமிழ்நாடு
அதிமுக, திமுகவுக்கு ஒரு வார்டு கூட இல்லை, அனைத்திலும் சுயேட்சைகள் வெற்றி: சாயல்குடியில் ஆச்சரியம்

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று உள்ளன என்பதும் அதிமுக ஒரு சில இடங்களில் வெற்றி பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சாயல்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அனைத்திலுமே சுயேச்சைகள் வெற்றிபெற்றனர். அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் உள்பட அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஒருவர் கூட இந்த பேரூராட்சியில் வெற்றி பெறவில்லை என்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
சாயல்குடி பேரூராட்சியில் அனைவருமே சுயேட்சைகளாக வெற்றி பெற்று உள்ளதால் அவர்களில் ஒருவர் தலைவர் மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் அரசியல் கட்சி சாராத ஒருவர் தலைவர் துணைத் தலைவராக சாயல்குடி பேரூராட்சியில் பொறுப்பேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . சாயல்குடி பேரூராட்சியில் வெற்றிபெற்ற சுயச்சை வேட்பாளர்களின் விபரங்கள் பின்வருமாறு:
முதல் வார்டில் மாரியப்பன், 2வது வார்டில் பானுமதி, 3வது வார்டில் இந்திரா, 4வது வார்டில் சண்முகத்தாய், 5வது வார்டில் கோவிந்தன், 6வது வார்டில் மாணிக்கவள்ளி, 7 வது வார்டில் முகமது ஜின்னா, 8 வது வார்டில் அழகர்வேல்பாண்டியன் 9வது வார்பில் ஆபிதா பீவி, 10வது வார்டில் குமரையா, 11வது வார்டில் அமுதா, 12வது வார்டில் இந்துராணி, 13வது வார்டில் மணிமேகலை, 14வது வார்டில் இரா.காமராஜ், 15வது வார்டில் மாணிக்கவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர்