தமிழ்நாடு
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19 தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதில் பல வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தமிழக தேர்தல் ஆணையம் 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருந்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி தருமபுரி (8), திருவள்ளூர் (1), கடலூர் (1), தேனி (2), ஈரோடு (1) என
13 வாக்குச்சாவடிகளில் மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








