Connect with us

இந்தியா

மேட்ரிமோனியல் மூலம் நடந்த திருமணம்.. சில நாட்களில் நடந்த திடுக்கிடும் திருப்பம்..!

Published

on

குஜராத்தை சேர்ந்த ஒருவர் மேட்ரிமோனியல் மூலம் ஒரு பெண்ணை கண்டுபிடித்து திருமணம் செய்த நிலையில் அந்த பெண் சில நாட்களில் ஒரு கொள்ளை கும்பலை சேர்ந்தவர் என்பதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தார்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விமல் கரியா என்பவர் மேட்ரிமோனியல் மூலம் தனக்கான துணையை தேடினார். அப்போது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரீட்டா தாஸ் என்பவரை மேட்ரிமோனியில் மூலம் சந்தித்து அவருடன் பேசினார். இருவரது மனங்களும் ஒன்று சேர்ந்ததை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ரீட்டா தாஸ் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகத்து பெற்றவர் என்று கூறியிருந்தார். அவரது விவாகரத்து சான்றிதழ் விமல் கேட்டபோது தன்னுடைய திருமணம் பதிவு செய்யப்படவில்லை என்றும் பெரியவர்களால் பஞ்சாயத்து செய்யப்பட்டு விவாகரத்து செய்யப்பட்டதாகவும் எனவே அதற்கான ஆவணங்கள் இல்லை என்றும் கூறினார்.

#image_title

ரீட்டா தாஸை விமல் நம்பியதை அடுத்து இருவருக்கும் திருமணம் நடந்தது. அகமதாபாத்தில் இன்று திருமணம் நடந்த நிலையில் ஆறு மாதங்கள் இருவருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென தனது சொந்த ஊரில் ஒரு நில விவகாரத்தை கையாள வேண்டும் என்று ஊருக்கு செல்வதாக ரிட்டா கூறினார். ஆனால் திரும்பவே இல்லை.

இதனை அடுத்து விமல் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் கிடைத்தது. விமல் மனைவியின் உண்மையான பெயர் ரீட்டா தாஸ் இல்லை என்றும், ரேகா தாஸ் என்றும் தெரியவந்தது. அது மட்டும் இன்றி அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி என்றும் தெரியவந்தது. இதனை அடுத்து விமல் அதிர்ச்சி அடைந்தார்.

ரேகா தாஸ் ஏற்கனவே அனில் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும் இருவரும் அசாம் மாநில சட்டசபை முன் நிறுத்தப்பட்டிருந்த கார் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டனர் என்றும் அனில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் ரேகா தாஸ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார் என்றும் தெரியவந்தது. இதை அறிந்த விமல் பெரும் அதிர்ச்சி அடைந்து தனது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா49 minutes ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா2 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா2 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்16 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்16 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Translate »
Für den chrome webbrowser besuchen sie bitte diese seite von google : https : //support. Besuchen sie die exklusive seite von yachttogo. 3 days ha giang loop tour from sapa & return to hanoi city.