கட்டுரைகள்
நீங்கள் சீக்கிரம் பணக்காரர் ஆக வேண்டுமா? இதை டிரை பண்ணிப்பாருங்க!!!

மாதாந்திர சம்பளம் வாங்குறவங்களுக்கு கையில வாங்கினேன் பையில போடலை காசு போன இடம் தெரியல.. என்று புலம்பிக் கொண்டே காலத்தை ஓட்டுவது என்பது வாடிக்கையாகி விட்டது. அலுவலகத்தில் பிடிக்கும் பிஎஃப் தவிர்த்து வேறு எந்த ஒரு சேமிப்பும் செய்ய முடியாத அளவுக்கு நித்தம் ஒரு புதுப் பிரச்னையாவே இருந்தா நீங்கள் மட்டும் என்ன பண்ணுவீங்க? உங்கள மாதிரி ஆட்களுக்காகவே இப்ப நான் சொல்லப்போறதெல்லாத்தையும் கவனமாக பார்த்து செய்யுங்க.. அப்படி செய்திட்டா நீங்கதான் வெற்றியாளர். பணக்காராகவும் மாறத் தொடங்கீட்டிங்கன்னு அர்த்தம்.
சம்பளத்தை சரியாக நிர்வகிக்க தெரியாமல் இஷ்டத்துக்கு செலவு செய்தால் சிரமம்தான். வருமானத்தை மிகச் சரியாக சேமிப்பு மற்றும் செலவு என பிரித்து செலவு செய்பவர்கள்தான் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
இப்படி சம்பளத்தை பிரித்து செலவு செய்பவர்கள் தங்களது எதிர்கால நிதி இலக்குகளை சுலபமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். கூடவே நிகழ்கால செலவுகளையும் சமாளிக்க முடியும். வருமானத்தை இப்படி திட்டமிட்டு நிர்வகித்தால் நீங்களும் சீக்கிரமாகவே பணக்காரர்களாக ஆகிவிடுவீர்கள்.
சம்பளத்தை 50-30-20 என மூன்று பகுதிகளாக பிரித்து உங்களது அவசியத் தேவைகளுக்கு செலவிட திட்டமிடுங்கள். சம்பளத்தில் 50 சதவீதத்தை அவசியத் தேவைகளுக்காகவும் 30 சதவீதத்தை எதிர்காலத் தேவைகளுக்கு என சேமிப்பாகவும் 20 சதவீதத்தை ஆடம்பர செலவுகளுக்காகவும் பயன்படுத்த வேண்டும். அவசியத் தேவைகள் என்பது உணவு, உடை, வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு, மின்சார செலவு ஆகியவை உள்ளிட்டவையாகும். சேமிப்பு என்பது அஞ்சலக கேமிப்பு , வங்கி சேமிப்பு, பங்கு சந்தை உள்ளிட்டவை அடங்கும். ஆடம்பர செலவு என்பது ஓட்டலுக்குச் சென்று சாப்பிடுவது, சினிமா பார்ப்பது என ஆசைப்படுவது உள்ளிட்டவை அடங்கும்.
ஏதாவது ஒரு மாதம் அவசியத் தேவைகளுக்கான செலவு அதிகமாகி விட்டால் ஆசைப்படும் செலவுகளுக்கான தொகையிலிருந்து எடுத்துக் கொள்ள வெண்டும். சேமிப்புத் தொகைகளை தானியங்கி முறையில் சம்பளத்திலிருந்தே நேரடியாக சம்பந்நதப்பட்ட கணக்குகளுக்கு செல்லும் வகையில் செய்து விட வேண்டும்.
என்ன… யோசனை செய்ய ஆரம்பித்து விடடீர்களா?.. நல்ல விதமாக செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள். அப்புறம் நீங்கள்தான் ராஜா…






