வணிகம்
ஏப்ரல் மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விலை உயர உள்ள பொருட்களின் முழு பட்டியல்!

ஏப்ரல் 1 -ம் தேதி ம்னுதல் வீட்டு உபயோக பொருட்களான பிரிட்ஜ், ஏசி, கார், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பொருட்களின் விலை 3 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரையில் உயர உள்ளன.
என்ன காரணம்?
மூலப்பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் தயாரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளன. எனவே இந்த விலை உயர்வு தவிர்க முடியாத ஒன்றாக உள்ளது என்று நிறுவனங்கள் கூறுகின்றன.
பால்

தினசரி அத்தியாவசிய தேவையான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலையும் ஏப்ரல் மாதம் முதல் உயரும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றார்கள்.
விமான டிக்கெட்

பெட்ரோல் விலை உயர்வால் விமான டிக்கெட் விலையும் உயர உள்ளன. விமான நிறுவனங்கள் ஏற்கனவே நட்டத்தில் உள்ளன. தொடர்ந்து இந்த நட்டத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. கொரோனா ஊரடங்கால் விமான சேவைகள் முடங்கியுள்ளன. ஆனாலும் ஊழியர்களின் சம்பளம், பராமரிப்பு போன்ற செலவுகள் விமான நிறுவனங்களுக்கு பிரச்சனையாக உள்ளன. எனவே விமான டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்று விமான நிறுவனங்கள் கூறுகின்றன.
மின்சாரம்

பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் மின்சார கட்டணம் உயர உள்ளன. தமிழகத்திலும் தேர்தலுக்குப் பின்பு மின்சாரம், பேருந்து கட்டணங்கள் எல்லாம் உயரலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.


















