வணிகம்
HDFC வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு இனிய செய்தி: EMI குறைய வாய்ப்பு!

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான HDFC வங்கி, கடன் பெற்ற நபர்களுக்குப் பெரிய நிம்மதியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கடன்களில் செலுத்தும் வட்டியை குறைக்கும் வகையில், 15 அடிப்படை புள்ளிகள் (basis points) வரை MCLR விகிதத்தை குறைத்துள்ளது.
ஏற்கனவே 2025 ஏப்ரலில் 9.10% முதல் 9.35% வரை இருந்த MCLR விகிதம், தற்போது 9.00% முதல் 9.20% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விகிதங்கள் மே 7, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளன.
🏦 MCLR என்பது என்ன?
MCLR (Marginal Cost of Funds based Lending Rate) என்பது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்கும் போது நிர்ணயிக்கும் குறைந்தபட்ச வட்டி விகிதம் ஆகும். இது அதிகரித்தால் வட்டியும் அதிகரிக்கும்; இப்போது குறைந்திருப்பதால் EMI சுமையும் குறையும்.
📉 ரெப்போ விகிதமும் குறைந்துள்ளது:
சமீபத்தில் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்குக் கடன் வழங்கும் போது பயன்படுத்தும் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 25 புள்ளிகள் வரை குறைத்தது. இதனைக் தொடர்ந்து HDFC பேங்கும் MCLR விகிதத்தில் மாற்றம் செய்துள்ளது.
🤝 யார் பயனடைவார்கள்?
இந்த குறைப்பு MCLR அடிப்படையிலான லோன்கள் பெற்றவர்களுக்கு மாத தவணை (EMI) குறையும் வகையில் நன்மை தரும். கடன் காலம் குறைவதும் கூட வாய்ப்புள்ளது.



















