Connect with us

தமிழ்நாடு

தயாநிதி மாறனை வம்பிழுக்கும் எச்.ராஜா!

Published

on

மக்களவையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன் அதிமுக அரசு ஊழல் அரசாங்கமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இதனால் பாஜக எம்பிக்கும் தயாநிதி மாறனுக்கும் இடையே விவாதம் அனல் பறந்தது. இந்நிலையில் இதனை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

நேற்று முன்தினம் மக்களவையில் பேசிய தயாநிதி மாறன், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு பணபலம், சிபிஐ, வருமான வரித் துறை ஆகியவை முக்கிய காரணம். தேர்தல் ஆணையமும் அதற்கு உதவிபுரிந்தது. எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் வட இந்தியாவில் பாஜக வென்றது என எடுத்த எடுப்பிலேயே பாஜகவை ஒரு பிடிபிடித்த தயாநிதி மாறன் பின்னர் தமிழக அரசை விமர்சித்தார்.

உலகம் வெப்ப மயமாகி வருவதால் நாட்டில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று குடியரசுத் தலைவர் உரையில் கூறியுள்ளார். ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு ஊழல் மிகுந்த அரசாங்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்சினைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.

இதனையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பாஜக கூட்டணி வைத்துள்ள அதிமுக தலைமையிலான தமிழக அரசை ஊழல் அரசு என கூறியதற்கு பாஜக எம்பிக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு ஆவேசமாக பதிலளித்த தயாநிதி மாறன், குடியரசுத் தலைவரின் உரையின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. ஊழல் குறித்து இந்த அவையில் பேசுவதற்கு எனக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. அதிமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்திலேயே வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது என கூறினார்.

இந்நிலையில் இதற்கு தனது டுவிட்டரில் பதிலளித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. அதில், ஊழலின் ஊற்றுக்கண் ஊழலுக்கு எதிராக அனல் தெரிக்கும் பேச்சாம். சாத்தான் வேதம் ஓதுகிறது. இரண்டரை ஆண்டுகள் பொய்களை பரப்பி வெற்றி கண்ட கூட்டமல்லவா. ருசி கண்ட பூணை. 5 வருடங்களுக்கு இன்னமும் என்னென்ன கேலிக்கூத்துகள் அரங்கேருமோ என தயாநிதி மாறன் பேசிய வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இதற்கு திமுகவினர் சமூக வலைதளங்களில் எச்.ராஜாவுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?