வீடியோ செய்திகள்
கொள்ளை நடக்கும் போது கூலாக சிக்கன் சாப்பிடும் நபர்… வைரல் வீடியோ….
Published
2 years agoon
By
ராஜேஷ்
பொதுவாக சில மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் அதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். பூகம்பமே வந்தாலும், சுனாமியே வந்தாலும் எதுவுமே நடக்காதது போல் கூலாக இருப்பார்கள்.
இந்நிலையில், ஒரு உணவகத்தில் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடிக்கும் போது கூலாக கோழி இறக்கையை சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது. பலரும் அமர்ந்து ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்க தலையில் ஹெல்மெட் அணிந்து, கையில் துப்பாக்கியுடன் ஒரு வாலிபர் உள்ளே நுழைந்து நேராக பணம் செலுத்தும் கவுண்டரில் சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை மிரட்டி வாங்குகிறார்.
அப்போது அங்கு மனைவியுடன் வந்திருந்த ஒருவர் கூலாக கோழி இறக்கையை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். மேலும், கொள்ளையர் கேட்காமலேயே தனது செல்போனை அவரிடம் கூலாக கொடுக்கிறார். இந்த சம்பவங்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை யுடியூப்பில் இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இதைப்பார்த்த பலரும் அந்த நபரை கிண்டலடித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் ‘என் உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம். நான் சாப்பிடும் கடைசி சிக்கன் இதுதான் என அவரின் மூளையில் ஓடியிருக்கும்’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை.
You may like
-
இளம்பெண்ணிடம் கொள்ளையடித்த திருடனுக்கு நேர்ந்த விபரீத முடிவு! கர்மா என்பது இதுதானா?
-
பாதுகாப்பு பெட்டகம் வரை சுரங்கம்.. எஸ்பிஐ வங்கியையே காலி செய்த கொள்ளையர்கள்!
-
ஜேசிபி இயந்திரத்தால் ஏடிஎம் மிஷினை நொறுக்கி ரூ.27 லட்சம் கொள்ளை!
-
ஏடிஎம் மிஷினில் பணம் வைத்த ஊழியரே திருடிய சம்பவம்: கடலூரில் பரபரப்பு!
-
அதிகாலையிலேயே டோர் டெலிவரி செய்த சிக்கன்: அதிரடி நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம்!
-
பாலைவனத்தில் அரபிக்குத்து பாட்டுக்கு செம டேன்ஸ்…. வைரல் வீடியோ…