ஜோதிடம்
வீட்டில் பண வரவை அதிகரிக்க ரப்பர் செடியை வளருங்கள்: வாஸ்து சாஸ்திரம் கூறும் பரிகாரம்!

வீட்டில் செல்வம், செழிப்பு மற்றும் நிதி வளர்ச்சியை விரும்பும் அனைவருக்கும் வாஸ்து சாஸ்திரத்தின் படி ரப்பர் செடி (Ficus Elastica) மிகப் பிரபலமானதொரு தீர்வு. தீபாவளிக்கு வீடு முழுவதும் சுத்தம் செய்த பிறகு, இந்த ரப்பர் செடியை வீட்டில் நட்டு வளர்த்தால், வீட்டில் பணவரவு மற்றும் மகிழ்ச்சி மிகுந்து பெருகும்.
ரப்பர் செடியின் வட்டமான இலைகள் நேர்மறை ஆற்றலை வழங்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக, தென்கிழக்கு திசையில் இந்த செடியை வைத்தால், நிதி வளர்ச்சி மற்றும் செல்வம் அதிகரிக்கும். இந்த செடியின் வலிமையான ஆற்றல் வீடு முழுவதையும் பாதிக்காமல் தூய்மையாக வைத்திருக்கும்.
ரப்பர் செடியின் சிறப்புகள்:
- அழகுக்கான செடி: இந்த செடி அழகான ஓவல் வடிவ இலைகளை கொண்டது. இதை உங்கள் வீட்டின் ஓரத்தில் அல்லது அறையிலேயே வைக்கலாம்.
- காற்று சுத்தம்: காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைடு, பென்சீன், கார்பன் மோனாக்சைடு போன்ற மாசுக்களை உறிஞ்சுவதில் ரப்பர் செடி சிறந்து விளங்குகிறது. இதனால் வீட்டின் காற்று சுத்தமாக இருக்கும்.
- பண ஈர்ப்பு: ஜோதிட நிபுணர்கள் கூறுவதின் படி, ரப்பர் செடி வீட்டில் பணத்தை ஈர்க்கும் திறன் கொண்டதாகவும், நிதி நிலையை மேம்படுத்தும் வகையில் செயல்படும்.
- வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த செடியை சரியான திசையில் வைத்து பராமரிப்பது வீட்டில் செல்வம் மற்றும் நிதி செழிப்பை அதிகரிக்கும்.





