தமிழ்நாடு
நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாதது ஏன்? கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம்

நீட் விலக்கு மசோதா ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவும் ஜனாதிபதி அனுப்பப்படவில்லை.
இதுகுறித்து திமுக கடும் விமர்சனம் செய்து வருகிறது என்பதும் பாராளுமன்றத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என்றும் குரல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து கவர்னர் ஆர்.என். ரவி அவர்களிடம் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது: அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

எந்தவொரு மசோதாவாக இருந்தாலும், அது சட்டப்பேரவையில் 2வது முறை நிறைவேற்றப்பட்டாலும், அந்த மசோதா மீது கவர்னருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாவை அனுப்பிவைக்க வேண்டும் என்ற அழுத்தம் ஆளுநருக்கு இல்லை.
இதுகுறித்து தமிழக முதல்வரிடமும், தலைமை செயலாளரிடமும் விளக்கப்பட்டதாகவும் தனது நிலைப்பாட்டை முதலமைச்சருக்கு, தலைமை செயலாளர் புரிய வைத்திருப்பார் என்றும் நம்புவதாகவும் கவர்னர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


















