இந்தியா
55 பயணிகளை விட்டு சென்ற கோ ஃபர்ஸ்ட்.. இழப்பீடாக என்ன கொடுத்தது தெரியுமா?
Published
3 weeks agoon
By
Shiva
சமீபத்தில் தனியார் விமான நிறுவனம் ஒன்று பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தை இயக்கிய போது அதில் 55 பயணிகளை மறந்து விட்டு சென்ற விவகாரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு கடந்த திங்கட்கிழமை காலை 6 மணி அளவில் கோ ஃபர்ஸ்ட் என்ற விமானம் கிளம்பியது. இந்த விமானத்தில் 55 பயணிகள் ஏறும் முன்னரே அந்த விமானம் கிளம்பிவிட்டது என்றும் பயணிகளின் லக்கேஜ் மட்டும் அந்த விமானத்தில் சென்றன என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விமான நிறுவன ஊழியர்களின் கவனக்குறைவை அடுத்து டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பி உள்ளதை அடுத்து விமான நிறுவனம் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. விமானம் கிளம்பிய போது இருந்த அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் விசாரணை முடியும் வரை பணியில் ஈடுபட வேண்டாம் என அறிவித்துள்ளது.
மேலும் இது கவனக்குறைவாக நடந்தது என்றும், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம் என்றும் தெரிவித்துள்ள கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் அடுத்த விமானத்திலேயே அனைவரும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அடுத்த 12 மாதங்களில் ஏதேனும் ஒரு உள்நாட்டு விமான பயண டிக்கெட் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் இழப்பீடாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து அந்த 55 விமான பயணிகளுக்கும் ஒரு இலவச விமான டிக்கெட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இந்த கவனக்குறைவான செயல் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு வகையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் இது கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கு ஒரு பெரிய கரும்புள்ளி தான் என்று கூறப்பட்டுள்ளது.
You may like
-
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் நடுவானில் மோதல்.. விமானி உயிரிழப்பு!
-
50 பயணிகளை மறந்துவிட்டு சென்ற விமானம்.. 10 நாட்களில் மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம்!
-
விமானத்தில் பறக்கும் வேலை.. சம்பளம் ரூ.3 கோடி.. நெட்பிளிக்ஸ் அறிவிப்பு!
-
கேர்ள் ப்ரண்ட் பயணத்தை தடுக்க இளைஞர் செய்த விபரீத செயல்.. சிறையில் கம்பி என்ணும் பரிதாபம்!
-
விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்… பொங்கிய எழுந்த கதக் நடனக்கலைஞர்கள்!
-
அமெரிக்காவில் 850 விமானங்கள் திடீர் முடக்கம்: அதிர்ச்சி காரணம்