செய்திகள்
நாமக்கல்லில் திலேப்பியா மீன் வளர்ப்பு இலவச பயிற்சி – விவசாயிகள் பயன்பெற அழைப்பு!
Published
8 மாதங்கள் agoon
By
Poovizhi
நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையம் (கேவிகே) சார்பில், திலேப்பியா மீன் வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவசப் பயிற்சி முகாம் வருகிற 10ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த பயிற்சியில்,
மீன்பண்ணைக் குட்டை அமைக்க சரியான இடத் தேர்வு
மண் மற்றும் நீர் பரிசோதனை முறைகள்
பண்ணைக் குட்டை அமைக்கும் நடைமுறை
சிறந்த மீன்குஞ்சு (Fish Seeds) தேர்வு செய்யும் விதம்
உணவளிப்பு மேலாண்மை
நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள்
என்பன குறித்து விரிவாக விளக்கப்படவுள்ளன.

மேலும், மாநில மற்றும் மத்திய அரசின் மீன்வள மானிய திட்டங்கள் குறித்து விரிவான தகவல்களும் வழங்கப்படுகின்றன.
விவசாயிகள், மீன் பண்ணையாளர்கள், ஊரக மகளிர் மற்றும் மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 7358594841 மற்றும் 04286-266345 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம் என வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
















