தமிழ்நாடு
என்கவுண்டர் செய்யப்பட்ட ரெளடிக்கு 50 நடிகைகளுடன் தொடர்பா? அதிர்ச்சி தகவல்

சமீபத்தில் தமிழக போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட ரெளடிக்கு 50க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கொலை கொள்ளை உள்பட பல்வேறு சமூகவிரோத செயல்களை செய்து வந்த ரெளடி நீராவி முருகனை பிடிக்க போலீசார் சமீபத்தில் முயற்சித்த நிலையில் தங்களுடைய பாதுகாப்புக்காக என்கவுண்டர் செய்தனர் என்பதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே. இந்த என்கவுண்டர் குறித்து அறிக்கை தருமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில் நீராவி முருகன் கொலை கொள்ளை அடித்த பணத்தை நடிகைகளுக்கு வாரி இறைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய கொள்ளை செய்தவுடன் சென்னை வடபழனி வளசரவாக்கம் போன்ற பகுதிகளில் தங்கியிருந்து நடிகைகளுடன் உல்லாசமாக நீராவி முருகன் இருந்ததாகவும், கொள்ளையடித்த நகைகளை நடிகைகளுக்கு பரிசாக அளித்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து இருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீராவி முருகன் பல முன்னணி நடிகைகளும் தொடர்பு இருந்ததாகவும் பல துணை நடிகைகள் தொடர்பில் இருந்ததாகவும் அவருடன் தொடர்பில் இருந்த நடிகைகளின் எண்ணிக்கை 50க்கும் மேல் இருக்கும் என கூறப்படுவது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.









