வணிகம்
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை இழந்த எலன் மஸ்க்! யாரு ஃபர்ஸ்ட் தெரியுமா?

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திலிருந்து வந்த எலன் மஸ்க் இரண்டாம் இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார் என ஃபோர்ப்ஸ் தளம் தெரிவித்துள்ளது.
டெஸ்லா நிறுவனரும், அன்மையில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிவவருமான் எலன் மஸ்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் 185.6 பில்லியன் டாலர் செலவ மதிப்புடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

முதல் இடத்தில் 185.7 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் லூயிஸ் வியூட்டனின் தாய் நிறுவனமான LVMH-ன் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் பிடித்துள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரனா கவுதம் அதானி 134.8 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்,

அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசொஸ் 111.2 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 4-ம் இடத்தில் உள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 93.3 பில்லியன் டாலர் செல்வ மதிப்புடன் 8வது இடத்தில் உள்ளார்.






















