வணிகம்
அமேசான், கூகுள், மைரோசாப்ட், பேஸ்புக் தொடர்ந்து ஊழியர்கள் பணிநீக்கத்தை கையில் எடுத்த அடோப்!
Published
2 months agoon
By
Tamilarasu
மென்பொருள் நிறுவனமான அடோப் உலகளாவிய மேக்ரோ பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
அடோப் நிறுவனத்தின் இந்த ஊழியர்கள் பணிநீக்கம் விற்பனை பிரிவில் மட்டும்தான். இது மொத்த நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் இல்லை என தெரிவித்துள்ளது.
விற்பனை துறை பணிநீக்கம் செய்யும் அதே நேரம், முக்கிய பணிகளுக்கு ஊழியர்களைத் தொடர்ந்து பணிக்கு எடுத்து வருவதாகவும் அடோப் கூறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது சிறிய அளவில் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே திட்டமிட்டுள்ளதாக அக்டோபர் மாதம் நடைபெற்ற அடோப் மேக்ஸ் 2022 மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் காலாண்டில் 4.43 பில்லியன் டாலர் வருவாய் பதிவு செய்துள்ளது அடோப் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 15 சதவீத சரிவு.
You may like
அமேசான் வீட்டுக்கு அனுப்பும் ஊழியர்களில் இந்தியர்கள் மட்டும் இத்தனை பேர்களா? அதிர்ச்சி தகவல்
5 நாட்களில் 30 ஆயிரம் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அடுத்தடுத்த அறிவித்த 4 பிரபல நிறுவனங்கள்!
ஒரே ஒரு அறிவிப்பு.. ரூ.5000 கோடி லாஸ்: அமேசான் ஜெஃப் பிஜோஸ் அதிர்ச்சி
17000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. அதிர்ச்சியில் அமேசான் ஊழியர்கள்
பணிநீக்கம் செய்யப்பட்ட மெட்டா ஊழியருக்கு ஒரு மாதம் கழித்து வந்த பார்சல்.. என்ன இருந்தது தெரியுமா?
பேஸ்புக் முதல் பைஜூஸ் வரை.. 2022-ம் ஆண்டு ஊழியர்கள் பணிநீக்கத்தை அறிவித்த பிரபல நிறுவனங்கள்!