தமிழ்நாடு
சொந்த கட்சியிலேயே சூனியம்! உதயநிதிக்கு கெடுபிடி!!

திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதற்கு அவரது தரப்பு ஆதரவாளர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில், மற்ற திமுக நிர்வாகிககளுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகனின் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது. வருகின்ற சட்டமன்ற அன்பழகனின் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை போட்டியிட திமுக இளைஞரணியினர் முடிவு செய்துள்ளனர்.
அன்பழகன் ஏற்கெனவே அந்தத் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதனால் அன்பழகனின் வாரிசு தான் திருவல்லிக்கேணி-சேப்பாக்கத்தில் போட்டியிட வேண்டும் என்று ஒரு மாவட்ட நிர்வாகி கிடுக்குபிடி வேலையில் ஈடுபட்டு வருகிறார்.
இதே போன்று திமுகவிற்கு கடுமையாக உழைத்தவன் நான், எனவே நான் தான் அந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்று பகுதி நிர்வாகி ஒருவர் இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்த இரு பிரச்சனைகளுக்கு மத்தியில் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்பது தான் கேள்விக்குறி.





















