Connect with us

உலகம்

துருக்கி பூகம்பத்தை முன்கூட்டியே கண்டுபிடித்த பறவைகள்: வைரல் வீடியோக்கள்

Published

on

துருக்கியில் நேற்று நிகழ்ந்த பயங்கர பூகம்பத்தை பறவைகள் முன்கூட்டியே கண்டுபிடித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

துருக்கியில் நேற்று அதிகாலை நிகழ்ந்த 7.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் மற்றும் நேற்று மாலை நிகழ்ந்த 7.5 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஆகிய இரண்டு பூகம்பங்கள் அந்நாட்டையே சிதிலப்படுத்தியுள்ளது. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை கட்டிடங்கள் இடிந்த இடிபாடுகள் தான் காணப்படுவதாகவும் இதுவரை சுமார் 3000 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க புவி ஆராய்ச்சி நிறுவனத்தின் கணிப்பின்படி இந்த பூகம்பத்தில் பத்தாயிரம் பேர் வரை பலியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது கிட்டத்தட்ட உண்மையாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலக நாடுகளின் உதவவியோடு துருக்கி அரசாங்கம் மீட்பு பணிகளை விரைவாக நடத்தி வருகிறது என்பதும் இடுப்பாடுகளுக்கு இடையே உயிரோடு இருப்பவர்களை காப்பாற்றும் நோக்கில் மீட்பு பணியினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளில் முதல் நாடாக இந்தியா துருக்கி நாட்டிற்கு மருத்துவ குழுக்களை அனுப்பி உள்ளது என்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளையும் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளும் தற்போது இக்கட்டான நேரத்தில் இருக்கும் நிலையில் உலக நாடுகள் கை கொடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியா பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வாறு வெளியாகி உள்ள வீடியோக்களில் ஒன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

துருக்கியில் பூகம்பம் ஏற்படுவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு பறவைகள் ஒரு வித்தியாசமான சத்தத்தோடு ஒரு பதட்டமான நிலையோடு பறந்ததை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. பறவைகள், விலங்குகள், ஊர்வன ஆகியவை முன்கூட்டியே பூகம்பத்தை அறிந்து கொள்ளும் என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கும் நிலையில் அதை நிரூபிப்பது போல் இந்த வீடியோ உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

பூமியின் காந்த புலத்தை பறவைகளால் உணர முடியும் என்றும் பூமி கீழே நகரும்போது புவி காந்த மாற்றங்களை பறவைகள் உணர்ந்து கொள்ளும் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் அது உண்மைதானா என்று எண்ண வைக்கும் வகையில் இந்த வீடியோ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பறவைகள் ஒருவித வித்தியாசமான சத்தத்தோடும் பதட்டத்தோடும் இருந்த ஒரு சில நிமிடங்களில் பூகம்பம் நிகழ்ந்தது என்பது நிச்சயமாக தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் பறவைகள் பூகம்பத்தை முன்கூட்டியே உணர்ந்துதான் அந்த பதட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா19 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்20 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா20 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
上門電腦維修 公司電腦保養.