Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் (05/12/2020)

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

05-12-2020

சனிக்கிழமை

மேஷம்:

இன்று நீங்கள் எப்போதுமே வேலையை திட்டமிட்டு முடிப்பீர்கள். சொந்த பந்தங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து நினைத்த காரியத்தை முடித்துக் கொள்வீர்கள்.  எதிலும் யாரையும் நம்பி கையெழுத்து போடும்முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

ரிஷபம்:

இன்று சந்தோஷம் துக்கம் இரண்டையும் மாறி மாறி அனுபவிக்கப் போகிறீர்கள். தெய்வீக விஷயங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். ஆனால் அதில் முழு நம்பிக்கையுடன் பங்கு பெறுங்கள். வாய்ப்புண் எதுவும் வருவதற்கு காக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்:

இன்று கோபத்தைக் கட்டுப்படுத்தி காரியங்களில் கவனத்தை செலுத்தவும். தொழிலை விமர்சிப்பவர்களை அமைதியாக அலட்சியப்படுத்துங்கள். வெற்றிவாகை சூடுவீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்:

இன்று உங்கள் கவலைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் நாள். யார் யாரைப் பற்றி சொன்னாலும் ஆதாரமில்லாமல் எந்த விஷயத்தையும் நம்பக்கூடாது. வீட்டிலுள்ளவர்களிடம் யோசனை கேட்டு எதையும் செய்வது உத்தமம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்:

இன்று எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம். எனவே உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி:

இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்:

இன்று நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்:

இன்று எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

தனுசு:

இன்று வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள், சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். உங்கள் கௌரவம் உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மகரம்:

இன்று உஙக்ளின் பொருளாதார வலிமை கூடும்.அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. இழப்பு ஏற்படலாம். வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்:

இன்று சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மீனம்:

இன்று வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and.