கிரிக்கெட்
5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள்: சிஎஸ்கேவின் கனவை பறித்த மும்பை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் வென்றால் தான் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருந்த நிலையில் சற்று முன் வரை 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.
முதல் ஓவரிலேயே கான்வே மற்றும் மொயின் அலி விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அடுத்ததாக ராபின் உத்தப்பா விக்கெட்டையும் இழந்தது.
அதனை அடுத்து ருத்ராஜ், அம்பத்தி ராயுடு விக்கெட்டுக்களும் அடுத்தடுத்து விழுந்ததால் சற்று முன்வரை சிஎஸ்கே அணி 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது .
தோனி மற்றும் ஷிவம் டூபே களத்தில் தலா 6 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தால் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று போட்டி நடைபெறும் மைதானத்தில் மின்சாரம் இல்லை என்பதால் ஜெனரேட்டர் உதவியின் மூலம் மட்டுமே போட்டி நடைபெற்று வருகிறது. எனவே இன்றைய போட்டியில் டிஆர்எஸ் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.




















