தமிழ்நாடு
கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறையும் தொற்று – இந்த முறை என்னென்ன தளர்வுகள்?

நாளை மறுநாளுடன் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலை முன்னிட்டு போடப்பட்டுள்ள ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. மாநில அளவில் கொரோனா தொற்றும் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் இன்னும் தொற்றின் வீரியம் இருப்பதனால், மேலும் ஒரு வார காலத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.
அதே நேரத்தில் அடுத்த வாரத்தில் மேலும் கூடுதலான தளர்வுகள் அளிக்கப்பட உள்ளன.
Read More: விஜய் டிவியில் பாலியல் தொல்லை….ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வனிதா விஜயகுமார்!

இது குறித்து மருத்துவத் துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். நாளை, அடுத்த வாரத்துக்கான தளர்வுகள் குறித்த விவரம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
கடந்த சில வாரங்களாக தொற்று அதிகமுள்ள கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
எனவே அந்த மாவட்டங்களையும் இணைத்து தளர்வுகள் விவரம் வெளியாகும் எனத் தெரிகிறது. தற்போது வரை கோவையில் தான் ஒரு நாள் பாதிப்பானது தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது.
Read More: பெங்களூருவில் திடீரென கேட்ட ‘பூம்’ சத்தம் – மக்கள் அதிர்ச்சி!!!
















