டிவி
‘தல’ அஜித் மச்சானுடன் ஜோடி சேரும் ‘குக் வித் கோமாளி’ நட்சத்திரம்..!

திரெளபதி இயக்குநரின் அடுத்தத் திரைப்படத்திலும் நாயகனாக நடிக்கும் ரிச்சர்டு ரிஷி-க்கு ஜோடியாக க’குக் வித் கோமாளி’ நட்சத்திரம் ஒருவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
திரெளபதி திரைப்படம் பெரும் விவாதத்துக்கு உள்ளான போது அதன் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குநர் மோகன். திரெளபதி படத்தில் நாயகனாக நடிகர் அஜித் மச்சான் ரிச்சர்டு ரிஷி நடித்திருந்தார். இவர் நடிகை சாலினியின் தம்பி ஆவார். ரிச்சர்டு மீண்டும் இயக்குநர் மோகன் உடன் இணைந்து அடுத்த படத்தை வழங்கத் தயாராகி உள்ளார்.
இந்தப் படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார். தர்ஷா குப்தா விஜய் டிவி-யில் வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகத் தற்போது பிரபலமடைந்து வருகிறார். விஜய் டிவியிலேயே செந்தூரப்பூவே சீரியலில் சிறிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
ரம்யா பாண்டியனின் வரிசையில் தர்ஷா குப்தாவும் பல போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.


















