உலகம்
பிணங்களை தோண்டி மண்டை ஓடுகளுக்கு முத்தமிடும் இளைஞன்.. லைவ் வீடியோ ஒளிபரப்பியதால் பரபரப்பு..!

சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை பதிவு செய்து ஏராளமான லைக்களையும் பார்வையாளர்களையும் பெற்று அதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் தற்கால இளைஞர்களிடம் அதிகம் உள்ளது. இதற்காக அவர்கள் பல வகைகள் ரிஸ்க் எடுக்கிறார்கள் என்பதும் ரிஸ்க்கான முறைகளில் செல்பி உள்ளிட்ட வீடியோக்களை எடுத்து அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.
இளைஞர்களின் இந்த ரிஸ்க் காரணமாக சில சமயம் அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாக முடிகிறது என்பதும் பல விபரீதங்கள் இதனால் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட இரண்டு இளைஞர்கள் ரயில் தண்டவாளத்தில் ரீல்ஸ் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது ரயில் மோதி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த வகையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த சீனாவை சேர்ந்த 21 வயது இளைஞன் கல்லறைகளுக்கு சென்று அங்கு உள்ள பிணங்களை தோண்டி அந்த பிணங்களின் எலும்புகூடுகளுடன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி மண்டை ஓடுகளுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோக்களையும் அவர் நேரடியாக ஒளிபரப்பி உள்ளார்.
இதுகுறித்து தகவல் அடைந்த அந்த பகுதி மக்கள் அந்த இளைஞனையும் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த இரண்டு பேர்களையும் பிடித்து காவல்துறையில் ஒப்படைந்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த இந்த சம்பவம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் தற்போது அந்த இளைஞனுக்கு ஒன்பது மாத சிறை தண்டனை நீதிமன்றம் விதித்துள்ளது.
வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக பிணங்களை தோண்டி அதில் உள்ள எலும்புக்கூடுகளுடன் செல்பி எடுத்து வீடியோவை அதுவும் நேரலை வீடியோவாக வெளியிட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.