Connect with us

வேலைவாய்ப்பு

சென்னையில் நாளை வேலைவாய்ப்பு முகாம் – பல நிறுவனங்களில் உடனடி நியமனம்!

Published

on

சென்னையில் நாளை நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பல்வேறு நிறுவனங்களில் உடனடி நியமன வாய்ப்பு

வேலை தேடும் இளைஞர்களுக்காக சென்னையில் நாளை (ஆகஸ்ட் 29) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, எந்தச் செலவுமின்றி வேலை நாடுநர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி ஆலந்தூர் சாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் நேரடி நேர்காணல் நடத்த உள்ளன.

10-ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்பப் பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றவர்கள் இம்முகாமில் பங்கேற்கலாம். திறமை மற்றும் ஆர்வம் கொண்டவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

20-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. தங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட நபர்களை தேர்வு செய்து உடனடியாக நியமனம் செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜசடே தெரிவித்துள்ளார்.

மேலும், மாற்றுத் திறனாளிகளும் எந்தத் தடையுமின்றி பங்கேற்கலாம். வேலை நாடுநர்களும், வேலையளிப்பவர்களும் தங்கள் விவரங்களை **தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in**-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
Meci việt nam chuyên cung cấp giải pháp sản phẩm phụ trợ nhà xưởng, chuyên sản xuất và lắp đặt rèm nhựa pvc, cửa cuốn nhanh pvc, quạt cắt gió, Đèn, vách,.