Connect with us

தமிழ்நாடு

சென்னை மாலில் நடந்த மதுவிருந்தில் கலந்து கொண்ட ஐடி ஊழியர் பலி!

Published

on

சென்னை அண்ணாநகரில் உள்ள மால் ஒன்றில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்ட ஐடி ஊழியர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை பொருத்தவரை சனிக்கிழமை இரவு என்றாலே ஐடி ஊழியர்கள் மது விருந்தில் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் உள்ள மால் ஒன்றில் அனுமதி பெறாமல் மது விருந்து நடந்துள்ளதாக தெரிகிறது .

இந்த மது விருந்தில் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரவீன் என்பவர் கலந்து கொண்டார். மது விருந்தில் கலந்து கொண்ட சிறிது நேரத்தில் திடீரென மயக்கம் அடைந்து உயிரிழந்ததாக தெரிகிறது.

இது குறித்து காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை செய்ததில் உயிரிழந்த இளைஞர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அனுமதி பெறாமல் மது விருந்து நடத்திய மால் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?