உலகம்
கடைசி ஜும்லா பட்ஜெட்.. இணையத்தில் டிரெண்டில் பாஜக.. பாஜக அதிர்ச்சி!

டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு எதிராக இணையத்தில் #AakhriJumlaBudget என்ற டேக் வைரலாகி உள்ளது. இதன் அர்த்தம் கடைசி ஜும்லா (ஏமாற்று) பட்ஜெட் என்பதாகும்.
தனது கடைசி பட்ஜெட்டை மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தது. மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் காத்து தெரிவித்துள்ளனர்.
இணையத்தில் இதற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து இந்த பட்ஜெட்டை எதிர்த்து தற்போது புதிய டேக் ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடைசி ஏமாற்று பட்ஜெட் என்று டேக் (#AakhriJumlaBudget) உருவாக்கி வைரல் செய்து வருகிறார்கள். தேசிய அளவில் இந்த டேக் வேகமாக முன்னேறி வருகிறது.










