இந்தியா
ரத்தன் டாடாவை சந்தித்த பில்கேட்ஸ் கொடுத்த ஆச்சரியமான பரிசு..!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இந்தியா வருகை தந்துள்ள நிலையில் அவர் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவை வை சந்தித்து ஆச்சரியமான பரிசை அளித்துள்ளார்.
உலகின் முன்னணி கோடீஸ்வரரும் மைக்ரோசாப்ட் நிறுவனமான பில்கேட்ஸ் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவர் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட பல பிரபலங்களை சந்தித்துள்ளார். ரத்தன் டாடாவுடனான சந்திப்பு குறித்து பில்கேட்ஸ் பவுண்டேஷன் ஆப் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எங்கள் இணை நிறுவனர் பில் கேட்ஸ் அவர்கள் ரத்தன் டாடா மற்றும் என். சந்திரசேகர் ஆகியோர்களை சந்தித்து ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவில் ஆரோக்கியம், நோய் கண்டறிதல், ஊட்டச்சத்துக்கான எங்கள் பணியை வலுப்படுத்த நாங்கள் முயற்சி செய்து உள்ளோம் என்றும் இதுகுறித்து ரத்தன் டாடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தன் டாடா மற்றும் என் சந்திரசேகர் ஆகிய இருவருக்கும் பில்கேட்ஸ் ’ அடுத்த தொற்று நோயை தடுப்பது எப்படி’ மற்றும் ’காலநிலை பேரழிவை தவிர்ப்பது எப்படி’ ஆகிய புத்தகங்களையும் பரிசாக வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது வருமானத்தில் பாதிக்கு மேலான தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக ரத்தன் டாடா அளித்துள்ளார். தனிநபர் அளவிலும் டிரஸ்ட்களின் அளவிலும் ஏராளமான நன்கொடையை அளித்துள்ளார். அதேபோல் பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து உலகம் முழுவதும் ஏராளமான நிதி உதவி செய்துள்ளார் என்றும் உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் வறுமையை ஒழிப்பதிலும் அவரது டிரஸ்ட் கவனம் செலுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பில்கேட்ஸ் தனது இந்திய பயணத்தின் போது இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அவர்களை சந்தித்தார் என்பதும் நிதி சேர்த்தல், பணம் செலுத்தும் முறைகள், மைக்ரோ பைனான்ஸ், டிஜிட்டல் கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர் விவாதித்தார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் பில்கேட்ஸ் அவர்களை சந்தித்தார் என்றும் தனது அறக்கட்டளைக்கு உதவி செய்த பில்கேட்ஸ் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் பில்கேட் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திராவும் சந்தித்தார் என்பதும் இருவரும் தொழில் துறை குறித்து முக்கிய ஆலோசனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரையும் பில்கேட்ஸ் சந்தித்தார். கடந்த ஆண்டு தி பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட யூடியூபரும் நடிகருமான பிரஜக்தா கோலியையும் அவர் சந்தித்தார்.