வீடியோ
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்த சிங்க பெண்ணே பாடல்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள சிங்க பெண்ணே பாடல் ஒருவழியாக நேற்று இரவு பத்து மணிக்கு வெளியானது.
சிங்கபெண்ணே பாடல் முன்கூட்டியே லீக் ஆன நிலையில், அர்ச்சனா கல்பாத்தி, நேற்று ஜூலை 23ம் தேதி பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அறிவித்தார்.
நேற்று காலை முதலே அவரது அப்டேட்டுக்காக விஜய் ரசிகர்கள் காத்திருந்து காத்திருந்து நொந்து போனார்கள்.
எப்ப சார் பாட்டு ரிலீசாகும் என ட்விட்டரில் மீம்ஸ் மழையும் பொழிந்தன.
நேற்று இரவு வரை பாடல் வெளியாகாததால், விஜய் ரசிகர்கள் நொந்து போய் அர்ச்சனா கல்பாத்தியின் அதிகாரப்பூர்வ ட்விட்டருக்கு தொடர்ந்து ட்வீட் செய்து வந்தனர்.
இறுதியில், இரவு பத்து மணிக்கு சிங்க பெண்ணே பாடல், ஒரு கூடுதல் சர்ப்ரைஸ் உடன் வெளியானது.
அட்லீ, பாடலாசிரியர் விவேக் இசைப்புயலிடம் பெண்களுக்கான ஒரு ஆந்தம் வேண்டும் என கேட்க, ரஹ்மான் சார் கர்ஜனையில் சிங்க பெண்ணே பாடல், அமைக்கப்பட்டிருந்த விதம், பலருக்கும் கூஸ் பம்ப்ஸை ஏற்படுத்தி வருகிறது.
ஆழப்போறான் தமிழன், ஒரு விரல் புரட்சி வரிசையில், பெண்களுக்கான ஆந்தமாக இந்த சிங்க பெண்ணே பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாடலில், நயன்தாராவின் லுக்கும் ரிவீல் செய்யப்பட்டுள்ளது. பிகில் படத்திற்காக ரசிகர்களுடன் சேர்ந்து நாங்களும் வெயிட்டிங்!