டிவி
கோழிப் பண்ணையாக மாறிய Bigg Boss வீடு… யார் கோழி, யார் நரி..? – பரபர போட்டி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் தற்போது நடந்து வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் சென்ற வாரம் 2 பேர் எவிக்ட் ஆன நிலையில், வார நடுவாக்கில் ஷோ இருப்பதால், போட்டிகள் அமர்க்களப்பட தொடங்கியிருக்கின்றன. அதன்படி இன்று பிக் பாஸ் வீடு கோழிப் பண்ணையாக மாறியுள்ளது.
இந்தப் போட்டியின்படி, வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஒரு தரப்பு கோழியாகவும், இன்னொரு தரப்பு நரிகளாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். கோழிகளின் முட்டைகளை நரிகள் திருட முயல வேண்டும். அப்படி வரும் நரிகளின் வாலை கோழிகள் பிடித்துவிட்டால், அவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
ஆனால், இந்தப் போட்டியில் தங்களுக்கு ஏற்றவாறு கோழிகள் தரப்பும் நரிகள் தரப்பும் டீலிங் செய்து கொள்ளலாம். பிக் பாஸ் கரன்சி மூலம் இந்த டீலிங் நடைபெறும். பல சுற்று போட்டிக்குப் பின்னர் யாரிடம் அதிக தொகை இருக்கிறதோ அவரே வெற்றியாளர். அவருக்கு ஒரு சிறப்புப் பரிசு காத்துள்ளது.
இன்றைய பிக் பாஸின் ஒரு ஃபன் சுற்று இருப்பதனால், ரசிகர்களுக்கு விருந்து காத்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.