வேலைவாய்ப்பு
திருச்சி BHEL நிறுவனத்தில் ITI, டிப்ளமோ, இஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு 354 அப்ரெண்டிஸ் வேலை வாய்ப்பு!

திருச்சி பெல் நிறுவனத்தில் (BHEL – Bharat Heavy Electricals Limited) 354 அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புகள் பட்டதாரி அப்ரெண்டீஸ், டெக்னிக்கல் அப்ரெண்டீஸ் மற்றும் ஐடிஐ அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு இடம் பெறுகின்றன.
மொத்த காலிப்பணியிடங்கள் – 354
Graduate Apprentices (பட்டதாரி அப்ரெண்டீஸ்): 80
Technician Apprentices (டெக்னிக்கல் அப்ரெண்டீஸ்): 57
Trade Apprentices (ஐடிஐ அப்ரெண்டீஸ்): 217
கல்வித் தகுதி:
பட்டதாரி அப்ரெண்டீஸ்: 12ஆம் வகுப்பு மற்றும் இன்ஜினியரிங் பட்டம் – குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள்.
டெக்னிஷியன் அப்ரெண்டீஸ்: 12ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ – குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள்.
டிரேடு அப்ரெண்டீஸ்: ஐடிஐ முடித்திருக்க வேண்டும். (பிரிவுகள்: Fitter, Welder, Turner, Machinist)
வயது வரம்பு:
குறைந்தது: 18 வயது
அதிகபட்சம்: 27 வயது
SC/ST: 5 ஆண்டு தளர்வு
OBC: 3 ஆண்டு தளர்வு
சம்பளம்:
Graduate Apprentices: ரூ.12,000
Technician Apprentices: ரூ.11,000
Trade Apprentices: ரூ.11,050
பணி காலம்: 1 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில்.
விண்ணப்பிக்க தகுதியுடைய ஆண்டுகள்:
2020 முதல் 2024 காலப்பகுதியில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
Merit List
சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)














