ga('set', 'anonymizeIp', 1);
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதுமட்டுமின்றி உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழ்நாட்டில் 4 பேருக்கு BA4, 8 பேருக்கு BA5 வகை கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் 8 பேருக்கு புதிய உருமாறிய கொடோன்ச்ச் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவட்டார் ஊராட்சி…
தமிழகத்தில் கடந்த…
This website uses cookies.