Connect with us

தமிழ்நாடு

ஆயுதபூஜை சிறப்பு பேருந்துகள்: 3 இடங்களில் இருந்து இயக்கவிருப்பதாக அறிவிப்பு!

Published

on

அக்டோபர் 14 மற்றும் 15 ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக 12, 13ஆம் தேதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகி உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலின்படி கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்காக வருகின்ற ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு 12.10.2021 மற்றும்‌ 18.10.2021 ஆகிய நாட்களில்‌ கூட்ட நெரிசலை தவிர்க்கும்‌ பொருட்டும்‌ சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்‌ இருந்து இயக்கப்படுகின்ற கீழ்கண்ட தடப்பேருந்துகள்‌ தீபாவளி, பொங்கல்‌ போன்ற பண்டிகைகளின்‌ போது
இயக்கப்பட்டது போன்று கீழ்கண்ட அட்டவணைபடி இயக்கப்படும்‌ மற்றும்‌ இதர பேருந்துகள்‌ வழக்கம்‌ போல்‌ கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்‌.

பேருந்து நிலையம்‌ மற்றும்‌ இயக்கப்படும்‌ பேருந்துகளின்‌ விவரம்‌ பின்வருமாறு :-

1. தாம்பரம்‌ இரயில்‌ நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள்: திண்டிவனம்‌ மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும்‌ பேருந்துகள்‌, சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும்‌ பேருந்துகள்‌, திண்டிவனம்‌ வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர்‌, சிதம்பரம்‌, காட்டுமன்னார்கோயில்‌ செல்லும்‌ பேருந்துகள்‌, மற்றும்‌ திண்டிவனம்‌ வழியாக புதுச்சேரி, கடலூர்‌, சிதம்பரம்‌ செல்லும்‌ பேருந்துகள்‌.

2. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள்: வேலூர்‌, ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர்‌, காஞ்சிபுரம்‌, செய்யாறு, ஒசூர்‌, திருத்தணி மற்றும்‌ திருப்பதி செல்லும்‌ பேருந்துகள்‌,

3. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள்:| மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும்‌ பேருந்துகள்‌ புதுச்சேரி, கடலூர்‌ மற்றும்‌ சிதம்பரம்‌ வழி 09), மயிலாடுதுறை, தஞ்சாவூர்‌, கும்பகோணம்‌, திருவாரூர்‌, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம்‌, வேளாங்கண்ணி, அரியலூர்‌, ஜெங்கொண்டம்‌, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர்‌, நாகர்கோவில்‌, கன்னியாகுமரி, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, திருப்பூர்‌, ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம்‌, சேலம்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ பெங்களூரூ

எனவே பயணிகள்‌ மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள்‌ மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகம்‌ மூலம்‌ இயக்கப்படும்‌. பயணிகள்‌ கண்டிப்பாக முகக்கவசம்‌ அணிந்து பயணம்‌ மேற்கொள்ள கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?