தமிழ்நாடு
பேருந்துகளில் இ-டிக்கெட், Gpay மூலம் பணம் செலுத்தலாம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

விரைவில் பேருந்துகளில் இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த இ-டிக்கெட்டுக்களுக்கான கட்டணத்தை Gpay மூலம் பயணிகள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் விரைவில் பேருந்துகளில் இ-டிக்கெட் முறையை கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த இ-டிக்கெட்டை பணமாகவோ அல்லது Gpay மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு அட்டை கொடுப்பதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்றும் புதிய ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும் வரை மாணவ மாணவிகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டு இருந்த பழைய ஸ்மார்ட் கார்டு அட்டைகளை பயன்படுத்தி பேருந்துகளில் பயணம் செய்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.