கிரிக்கெட்
INDvAUS – ஆஸி., மண்ணில் வெற்றி; வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தியா! #VideoHighlights

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட இந்திய கேப்டன் அஜிங்கியே ரஹானே, ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட்டுகளுக்கு 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆரம்பித்தது. 200 ரன்கள் எடுத்த போது அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்தியாவுக்கு 70 ரன்கள் டார்கெட் வைக்கப்பட்டது.
சுலபமான இலக்காக இருந்தாலும் ஆரம்பித்திலேயே மயான்க் அகர்வால் மற்றும் புஜாராவின் விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணித் திணறியது. பின்னர் ஜோடி போட்ட சுப்மன் கில் மற்றும் ரஹானே ஆகியோர் இலக்கை அடைந்தனர். கில், விக்கெட் இழக்காமல் 35 ரன்களுடனும், ரஹானே, அவுட் ஆகாமல் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா, 1-1 என்று சமன் செய்துள்ளது.
இன்றைய ஆட்டத்தின் ஹைலைட்ஸ் இதோ;