Connect with us

கிரிக்கெட்

INDvAUS – ‘இந்த நாலு பேர் இல்லாமலே வெற்றி… வாவ் வாவ் இந்தியா’- புகழ்ந்து தள்ளும் சச்சின்

Published

on

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட இந்திய கேப்டன் அஜிங்கியே ரஹானே, ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் வரலாற்றுத் தோல்வியை சந்தித்த இந்திய அணி, அதிலிருந்து மீண்டு வந்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் இந்தியாவுக்குப் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தி வைரலாகியுள்ளது.

சச்சின் இந்திய அணி வெற்றி குறித்து, ‘விராட், ரோகித், இஷாந்த் மற்றும் ஷமி இல்லாமல் டெஸ்ட் போட்டியை வெற்றி பெறுவது என்பது மிகப் பெரும் சாதனை. முதல் டெஸ்ட் போட்டியின் தோல்வியைப் புறந்தள்ளிவிட்டு இந்திய அணி வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பிரில்லியன்ட் வின். வெல் டன் டீம் இந்தியா’ என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

அதேபோல விவிஎஸ் லட்சுமண், ‘இந்திய அணியின் பலமே, பென்ச் ஸ்டிரெங்த் தான்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட்டுகளுக்கு 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆரம்பித்தது. 200 ரன்கள் எடுத்த போது அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்தியாவுக்கு 70 ரன்கள் டார்கெட் வைக்கப்பட்டது.

சுலபமான இலக்காக இருந்தாலும் ஆரம்பித்திலேயே மயான்க் அகர்வால் மற்றும் புஜாராவின் விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணித் திணறியது. பின்னர் ஜோடி போட்ட சுப்மன் கில் மற்றும் ரஹானே ஆகியோர் இலக்கை அடைந்தனர். கில், விக்கெட் இழக்காமல் 35 ரன்களுடனும், ரஹானே, அவுட் ஆகாமல் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா, 1-1 என்று சமன் செய்துள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?