சினிமா செய்திகள்
கமல் படத்தை இயக்குகிறார்களா பா ரஞ்சித், மாரி செல்வராஜ்? வாய்ப்பே இல்லை என்கிறது கோலிவுட்!

உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்களை பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கப் போவதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கோலிவுட்டில் உள்ள பிரபலங்கள் இந்த கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று கூறி வருகின்றனர்.
பா ரஞ்சித் இயக்கிய காலா மற்றும் கபாலி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ரஜினிகாந்த் நடித்த போது ரஜினிக்கும் பா ரஞ்சித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் ஆனால் படத்தின் நன்மையை கருதி ரஜினி எதுவுமே இல்லை என்றும், ஆனால் தனது நெருங்கிய நண்பரான கமல்ஹாசனிடம் ரஜினிகாந்த் மனம் திறந்து இதைப்பற்றி கூறியதாகவும், இனிமேல் பா ரஞ்சித் படத்தில் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியதாகவும் ஒரு தகவல் உள்ளது.
அதிலிருந்தே இரஞ்சித் மீது கமல்ஹாசனுக்கும் ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லை என்று கூறப்படுகிறது. அவ்வபோது பா ரஞ்சித்தை கமல்ஹாசனை சந்தித்தாலும் அது ஒரு மரியாதை நிமித்த சந்திப்பாகவே இருந்தது என்றும் ஆனால் பா ரஞ்சித் படத்தில் நடிக்கும் எண்ணம் கமலுக்கு சிறிதளவு கூட இல்லை என்றும் கூறப்படுகிறது .
ஆனால் ஒருசில ஊடகங்கள் பா ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க போவதாகவும், அதேபோல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதற்கு கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டாலும் காலம் எந்தவகையான மாற்றத்தை தரும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.