சினிமா செய்திகள்
உதவி இயக்குநராக இதுதான் காரணமா அனுபமா?

பிரேமம் மற்றும் தனுஷின் கொடி படங்கள் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
கொடி படத்தில் இடம்பெற்ற ஹே சுழலி பாடல், அனுபமா பரமேஸ்வரனின் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்த ஒன்று. ஆனால், அவருக்கு தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெரிதாக அமையவில்லை. தற்போது தெலுங்கில் பிசியாகி வரும் அனுபமா, இயக்குநராகும் முயற்சியில் களமிறங்கியுள்ளார்.
திரைப்பட இயக்கத்தின் பக்கம் அனுபமாவின் ஆர்வம் சென்று விட்டதால், புதுப்படங்களில் கமீட் ஆவதை குறைத்துக் கொண்டு, துல்கர் சல்மான் தயாரிக்கும் ஒரு மலையாளப் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். விரைவில் இயக்குனராக மாற இருக்கிறார்.
மலையாள சினிமாவில் அனுபமா அறிமுகமானதால், மலையாளப் படம் ஒன்றையே முதலில் அனுபமா இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



















