Connect with us

உலகம்

அமெரிக்காவின் ஒரு நகரத்துக்கே விஷம் வைக்க திட்டம்.. கடைசி நொடியில் நிறுத்தப்பட்ட ஹேக்கரின் முயற்சி.. பகீர் தகவல்கள்!

Published

on

புளோரிடா : அமெரிக்காவில் இருக்கும் ஒரு நகரத்திற்கே விஷம் வைக்க பார்த்த ஹேக்கரின் முயற்சி கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவிற்கு வடமேற்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஓல்ட்ஸ்மர் நகரம். அங்கிருக்கும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி இந்த ஹேக்கிங் முயற்சி நடைபெற்றுள்ளது.

சுமார் 15 ஆயிரம் குடியிருப்பு வாசிகளுக்கு செல்லும் குடிநீரில் வழக்கமாக கலப்பதை விட 100 மடங்கு அதிகமான அளவு சோடியம் ஹைட்ராக்சைடு அமிலத்தை கலக்கும் முயற்சி அங்கிருக்கும் மேற்பார்வையாளர் ஒருவர் கவனித்ததால் கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அங்கிருக்கும் திரவ வடிகால் கிளீனர்களில் சோடியம் ஹைட்ராக்சைடு முக்கிய மூலப்பொருள். நீர் அமிலத்தன்மையை நிர்வகிக்கவும், நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குடிநீரில் இருக்கும் உலோகங்களைத் தவிர்க்கவும் இது மிகச் சிறிய அளவில் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அங்குள்ள கணினியை யாரோ தொலைவில் இருந்து ஹேக் செய்து இயக்கிக் கொண்டிருப்பதை கண்டறிந்தார். கணினியில் உள்ள கர்சரை சிறிது நேரம் அங்கும் இங்கும் நகர்த்துவதையும் கவனித்துள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு, திடீரென சோடியம் ஹைட்ராக்சைட்டின் அளவை அதிகரிக்கும் மென்பொருளை திறந்து அதற்கான அளவை அதிகரிக்க முயற்சி நடைபெற்றுள்ளது. ஆனால் ஆலை ஆபரேட்டர் உடனடியாக தலையிட்டு சோடியம் ஹைட்ராக்சைடு அளவை மாற்றினார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய பினெல்லாஸ் கவுண்டி ஷெரிப் பாப் குவல்டீரி, சோடியம் ஹைட்ராக்சைடு உள்ளீடு கொடுக்கும் அளவை ஒரு மில்லியனுக்கு 100 பகுதிகளுக்கு பதிலாக 11,100 என்கிற அளவில் அதிகரிக்க அந்த ஹேக்கர் முயற்சித்துள்ளார். இது வழக்கமான அளவை விட 100 மடங்கு அதிகமாகும்.

இது வெளிப்படையான குறிப்பிடத்தக்க மற்றும் ஆபத்தான அளவீடாகும். அதிர்ஷ்டவசமாக கடைசி நேரத்தில் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. நீர் அமைப்புகள், நாட்டின் பிற பொது பயன்பாட்டு அமைப்புகளைப் போலவே, முக்கியமான உள்கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். மேலும் பொதுபாதுகாப்பை சீர்குலைக்க நினைப்பவர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இலக்குகளாக உள்ளன.

இந்த தகவல் வெளியானதும் ஓல்ட்ஸ்மாரில் உள்ள அதிகாரிகள் உடனடியாக கணினியை தொலைவில் இருந்து இயக்குவதற்கான வசதியை துண்டித்தனர். மேலும் மற்ற நகரங்களில் உள்ள அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அரசாங்கங்களின் கணினி உள்கட்டமைப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்படாததால் அதை முறையாக பராமரிக்காமல் ஹேக்கர்களால் நகராட்சி நீர் மற்றும் பிற அமைப்புகளை எளிதில் குறிவைக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இக்காலகட்டங்களில் தொழில்கள் பெரும்பாலும் டிஜிட்டல் முறையில் இணைக்கப்படுவதால் இது போன்று தொலைவில் இருந்து அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்றுதான் என டிராகோஸ் செக்யூரிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் எம் லீ தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த நினைக்கும் குற்றவாளிகள் இனிவரும் காலங்களில் மேலும் பல மாநிலங்களில் குறிவைப்பதையும் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம் என்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உள்நாட்டை சேர்ந்தவரா அல்லது வெளிநாட்டினரா என்பது குறித்து எஃப்.பி.ஐ அதிகாரிகள், ரகசிய சேவை மற்றும் பினெல்லாஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் ஆகியவை விசாரித்து வருகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

ஆரோக்கியம்1 நாள் ago

தந்தையர் தினம் 2026: அப்பாவுக்கு அன்பை சொல்ல 17 மனதை உருக்கும் வாழ்த்து வரிகள்!

ஆன்மீகம்1 நாள் ago

எண் கணிதம்: இந்த தேதிகளில் பிறக்கும் பெண் குழந்தைகள் தந்தையின் அதிர்ஷ்ட நட்சத்திரங்களா? எண் 2-ன் சிறப்பு என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூன் 30 முதல் இந்த 4 ராசிக்காரர்கள் உஷார்! பணம், தொழில், குடும்பத்தில் சவால்கள் அதிகரிக்கலாம்

ஆன்மீகம்1 நாள் ago

சிவ யோகம் 2026: ஜூன் 24 முதல் இந்த 3 ராசிகளுக்கு சிவபெருமானின் அருள்… அதிர்ஷ்டம், செல்வம், வெற்றி குவியுமாம்!

ஆன்மீகம்1 நாள் ago

நிர்ஜலா ஏகாதசியில் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் முன்னேற்றம் கிடைக்குமா?

ஆன்மீகம்1 நாள் ago

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் சந்திரன்-கேது சேர்க்கை… இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்! சம்பள உயர்வுடன் 25 மாத நிலுவைத் தொகை கிடைக்குமா?

ஆன்மீகம்1 நாள் ago

கிரகண யோகம் 2026: சிம்ம ராசியில் உருவான அரிய யோகம்… இந்த 4 ராசிக்காரர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

இந்தியா6 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

கிரிக்கெட்7 நாட்கள் ago

பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வேட்டை… ஜூலன் கோஸ்வாமியின் சாதனையை நெருங்கிய தீப்தி சர்மா!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாவற்பழம் சாப்பிட்ட உடனே இந்த 5 உணவுகளை தவிருங்கள்! இல்லையெனில் செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலாவதியான லிப்ஸ்டிக் இனி குப்பைக்கு வேண்டாம்! இதை வைத்து வீட்டிலேயே செய்யலாம் 4 அசத்தல் மேக்கப் டிப்ஸ்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 4,500 அப்ரண்டிஸ் பணியிடங்கள்; பட்டதாரிகள் ஜூன் 22க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! ரூ.27,000 சம்பளத்தில் Project Assistant பணி – விண்ணப்பிக்க ஜூன் 22 கடைசி நாள்!

வணிகம்7 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் ரூ.72 லட்சம் கிடைக்குமா? முழு கணக்கு இதோ!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சியாளர்களுக்கு வேலைவாய்ப்பு; நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

Translate »
It takes less than 60 seconds to set up your professional profile.