இந்தியா
தங்கை மீது பாசம் காட்டிய பெற்றோர்.. 11 மாத தங்கையைக் கொன்ற 5 வயது சிறுமி!

பெற்றோர்கள் தங்கை மீது அதிகம் பாசம் காட்டியதால், 11 மாத தங்கையை, 5 வயது சிறுமி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காவ்யா தம்பதி. அவருக்கு 2 பெண் குழந்தைகள். 5 வயது சிறுமி நிர்மலா, 11 மாத குழந்தை ஹேமாஸ்ரீ.
தத்தித் தத்தித் நடந்துக்கொண்டு இருந்த குழந்தையை திடீர் என்று காணவில்லை. உடனே வீட்டில் உள்ள அனைவரும் பதறியடித்து தேட ஆரம்பித்துள்ளனர். கிடைக்காமல் போக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
காவல் துறையினர் தேடும் போது, விட்டில் தண்ணீர் டாங்கில் 11 மாத ஹேமாஸ்ரீ இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், உறவினர்களிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது எந்த தீர்வும் கிடைக்காத நிலையில் 5 வயது நிர்மலாவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, 5 வது சிறுமி நிர்மலா கூறியதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தங்கை பிறந்ததிலிருந்து அப்பாவும், அம்மாவும் என்கிட்ட பாசமாகவே இல்லை. அதனால் தங்கச்சியை தண்ணீர் டாங்கில் போட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார். கேட்ட உடன் மிரண்டு போன காவல் துறையினர் சிறுமி மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்.
இரண்டாம் குழந்தை பிறந்த பிறகு, முதல் குழந்தையை விட்டு பெற்றோர்கள் 2-ம் குழந்தையுடன் நேரத்தை அதிகம் செலவிடுகின்றனர். முதல் குழந்தையைச் சமமாக நடத்த சில பெற்றோர்கள் மறந்துவிடுகின்றனர். இதை தவறாக எடுத்துக்கொள்ளும் சிறுவர்கள், முதலில் தங்களுக்கு அடுத்துப் பிறந்தவர்களை சீண்டுவது என தொடர்ந்து அவர்களைக் கொல்லும் அளவிற்குச் சென்றுவிடுகிறது.
எனவே பெற்றோர்கள் கவனமாக இரண்டு குழந்தைகளிடமும் சமமான நேரத்தை ஒதுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


















