சினிமா செய்திகள்
‘விவாகரத்துக்குப் பின் பயந்து வாழ்ந்து வந்தேன்’- மனம் திறந்த நடிகை அமலா பால்

‘விவாகரத்துக்குப் பின் பயந்து வாழ்ந்து வந்தேன்’ என இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவாகரத்துக்கு குறித்து நடிகை அமலா பால் மனம் திறந்த பேசியுள்ளார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய்- நடிகை அமலா பால் இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் மனம் ஒத்துப் பிரிவதாக அறிவித்தனர். அதன் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டு இருவரும் பரஸ்பரம் விவாகரத்துப் பெற்றனர்.
அதன் பின்னர் சினிமாவில் பெரிதாக நடிக்காத அமலா பால் சமீப காலமாக மீண்டும் சினிமாவின் பிஸியாகத் தொடங்கியுள்ளார். தனது விவகாரத்து குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார் அமலா பால். அவர் கூறுகையில், “எனக்கு விவாகரத்து ஆன சமயத்தில் எனக்கு யாருமே ஆதரவு அளிக்கவில்லை. என்னை எல்லாரும் பயமுறுத்தவே பார்த்தனர். பயமுறுத்தி என்னை சோர்வடைய வைத்தனர்.
நான் அப்போது முன்னணி நடிகையாக இருந்த போதும் நான் பயத்துடனே வாழ வேண்டியதாக இருந்தது. அந்த சூழலில் யாருமே என் மனநிலை குறித்தோ எனது வாழ்க்கை குறித்தோ எந்தவித அக்கறையும் காட்டவில்லை” என மனம் திறந்து பேசியுள்ளார்.




















