தமிழ்நாடு
திமுக செயற்குழு கூட்டம்.. மகிழ்ச்சியில் ஸ்டாலின்.. அழகிரிக்கு அதிர்ச்சி

சென்னை: திமுக செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மு.க அழகிரிக்கு பெரிய சிக்கலை உண்டாக்கி உள்ளது.
திமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி மறைவு குறித்து இரங்கல் தெரிவிக்க இந்த கூட்டம் நடந்தது.

அழகிரிக்கு அதிர்ச்சி
திமுகவின் முக்கிய உறுப்பினர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் அழகிரி மெரினாவில் எழுப்பிய பிரச்சனை குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் அழகிரி குறித்து பேசவில்லை.
பேசியவர்களும் கூட, அழகிரிக்கு எதிராகவே பேசினார்கள். இது அழகிரிக்கு பெரிய மனவருத்தத்தை தந்துள்ளது. இன்று கூட்டத்தில் நடந்த விஷயத்தை பார்த்து அவர் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.




















