சினிமா
“AK62” படத்திற்குப் பிறகு மீண்டும் மோட்டார் பயணத்தைத் துவங்கும் அஜித்!

நடிகர் அஜித் மீண்டுக் தனது மோட்டார் பயணத்தைத் துவங்க உள்ளார்.
‘துணிவு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தின் இயக்குநர் என முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் கதையில் திருப்தி இல்லாததால் அவர் தற்போது விலகி உள்ளதாகவும் அவருக்கு பதிலாக மகிழ்திருமேனி அஜித் திரைப்படத்தை இயக்க உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. ஆக்சன் டிராமாவாக உருவாக இருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கலாம். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த நிலையில் ‘துணிவு’ படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு அது குறித்தான அறிவிப்பை வெளியிட்டார். இப்பொழுது இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு உலக அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான அறிவிப்பை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ajith
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘ லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை முடித்த பிறகு நடிகர் அஜித் தனது இரண்டாவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் பயணத்தை துவங்க உள்ளார். இதற்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை) பயணம் என பெயரிடப்பட்டுள்ளது’ என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.