சினிமா
ஜவான்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு!

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அட்லி இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்து வரக்கூடியத் திரைப்படம் ‘ஜவான்’. மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரக்கூடிய இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக நடிகை நயன்தாரா தற்போது மும்பை சென்றுள்ளார். இதில் நடிகை விஜய்சேதுபதி மற்றும் ஷாருக்கானின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
விஜய்சேதுபதில் இதில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்ட கேமராக்கள் இந்த சண்டைக் காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த வருடம் ஜூன் 2ம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. நடிகர் விஜய் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜூனும் இந்தப் படத்தில் நடிக்க இருந்த நிலையில், தேதி பிரச்சனை காரணமாக நடிக்க முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.