தமிழ்நாடு
வானகரத்தில் வரவேற்பு பேனர்கள் கிழிப்பு: நாளை அதிமுக பொதுக்குழு நடக்குமா?

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை அதிமுக வின் பொதுக்குழு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் போது நிலையில் திடீரென அதிமுக வரவேற்பு பேனர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுக ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது என்பதும், ஒற்றை தலைமை பதவியை பிடிக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஈபிஎஸ் தரப்புக்கு அதிக ஆதரவு இருப்பதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமைப் பதவியைப் பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு நடத்தப்படுவதால், எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இவற்றில் பல பேனர்கள் மர்ம நபர்களால் எழுதப்பட்டதாக தெரிகிறது. இதனால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதால் நாளை திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறுமா? என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.