சினிமா
விஜய் பற்றித் தவறாகப் பேசிய வெளிநாட்டுக்காரருடன் கோபமாகச் சண்டையிட்ட நடிகை வரலட்சுமி

ரசிகர்கள் மிகவும் அதிகம் நடிகர் விஜய்க்கு. சினிமா துறையில் பலரும் ரசிகராக இருப்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஒன்று.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜயின் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை 6.30 மணிக்கு நடந்தது. அதில் அனைவரும் வந்திருந்தார்.
அந்த விழா மேடையில் பேசிய நடிகை வரலட்சுமி தான் பெரிய விஜய் வெறியன் எனக் கூறினார். மேலும் யாராவது அவரைப் பற்றித் தவறாகப் பேசினால் கோபம் வரும், சண்டைலாம் போடுவேன் எனக் குறிப்பிட்டுச் சர்கார் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் ஒன்றை விவரித்துள்ளார்.
“அமெரிக்காவின் வேகாஸில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது வெள்ளைக்காரன் ஒருவன் விஜய் பத்தி தவறாகப் பேசிவிட்டான். நான் அவனை அடிக்கப் போய்ட்டேன். ‘எங்க தளபதி பத்தி உனக்கு என்ன தெரியும்’ என்று கேட்டேன்” என வரலக்ஷ்மி கூறினார்.












