சினிமா செய்திகள்
விருகம்பாக்கம் வீட்டிற்கு வந்தது விவேக் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்கு விரைவில் ஏற்பாடு!

பிரபல காமெடி நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவை கேட்டு கோலிவுட் திரையுலகினர் அதிர்ச்சியடைந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சற்று முன்னர் மருத்துவமனையிலிருந்து விவேக்கின் உடல் அவரது விருகம்பாக்கம் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
நடிகர் நடிகர் விவேக் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சி பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விவேக் உடல் அவர் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது #விவேக் #Vivek pic.twitter.com/3H3wNMj8gr
— meenakshisundaram (@meenakshinews) April 17, 2021






















