சினிமா செய்திகள்
தளபதி 65-ல் இயக்குநரைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திலும் மாற்றமா?

நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது.
பின்னர் சில காரணங்களுக்காக ஏ.ஆர்.முருகதாஸ் விலகினார். சன் பிக்சர்ஸ் பிரமாண்ட பொருட் செலவில் விஜய்யை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
ஆனால் இதுவரை சரியான இயக்குநர் முடிவாகாததால், தளபதி 65 படத்தை மெர்சல் திரைப்படத்தைத் தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மெர்சல் திரைப்படத்தைப் பிரம்மாண்ட பொருட் செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. அடுத்துக் குறைந்த பட்ஜெட்டில் ஒரு படத்தில் நடிக்க, தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு விஜய் வாக்கு கொடுத்து இருந்தார்.
எனவே சன் பிக்சர்ஸ் திரைப்படத்தைத் தள்ளி வைத்துவிட்டு, குறைந்த பட்ஜெட் படம் ஒன்றில் நடித்துவிடலாம் என்று விஜய் தரப்பு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்த மாற்றம் நிகழ்ந்தால் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை, இயக்குநர் பேரரசு தயாரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பேரரசு விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட வெற்றிப் படங்களை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



















