சினிமா செய்திகள்
ஏலத்திற்கு வந்த தல அஜித்தின் கையுறைகள்.. ஆரம்ப விலை எவ்வளவு தெரியுமா?

நடிகர் அஜித் வாகனம் ஓட்ட பயன்படுத்தும் கையுறைகளை ஏலம் மூலம் விற்க முடிவு செய்துள்ளனர்.
நடிகர் அஜித் குமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்களால் தல என்று அன்போடும் அழைக்கப்பட்டு வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் பல சர்வதேச பைக் ரேஸ் உள்ளிட்ட போட்டிகளிலும் பங்கேற்று பல்வேறு பரிசுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தல அஜித் வாகனம் ஓட்ட பயன்படுத்தும் கையுறைகளை அஸ்விதாஸ் (https://www.ashvitas.com/auction/ikf2021/ajith-kumar) என்ற நிறுவனம் ஏலத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.
தல அஜித் பயன்படுத்திய இந்த கையுறைகள் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
வலிமை அப்டேட்டுக்காக காத்திருக்கும் தல அஜித் ரசிகர்களுக்கு இது ஒரு ஆறுதல் செய்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


















