சினிமா செய்திகள்
HBD Rajini: ரஜினிக்கு அஜித் ரசிகர்கள் வழங்கிய பிறந்தநாள் பரிசைப் பாருங்கள்!

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, அஜித் ரசிகர்கள் ரஜினிக்கு பிறந்தநாள் பரிசை வழங்கியுள்ளனர்.
இன்று (டிச.12) சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள். இதனையொட்டி சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் நடிகைகள், ரசிக பெருமக்கள் என அனைவரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஃபேஸ்புக், டுவிட்டர் என சமூகவலைதளங்களிலும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நேற்றிரவு 12 மணியளவில் ரஜினியின் வீட்டிற்கு செல்லும் சாலையில் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்த நிலையில், ரஜினியின் பிறந்தநாளுக்கு அஜித் ரசிகர்கள் பிறந்தநாள் பரிசு ஒன்றை வழங்கியுள்ளனர். மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்தினர், ரஜினி-அஜித் இருவரும் ஒன்றாக இருக்கும் ஃபோட்டோ பிரேமை பரிசாக வழங்கியுள்ளனர். அஜித் ரசிகர்கள் இந்தப் பரிசை நேற்று வழங்க, அதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து மலேசிய அஜித் ரசிகர்கள் கூறுகையில், ரஜினிக்கு பரிசு வழங்கிய இந்த தருணம் தல அஜித் ரசிகர் மன்றத்தினரின் வாழ்நாள் நாளில் மறக்க முடியாதது என்றனர். அஜித் ரசிகர்கள் ரஜினிக்கு பரிசு வழங்கிய இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. தல ரசிகர்கள் எப்போதும் ஒருபடி மேல் சென்று தான் எல்லா விஷயங்களையும் கச்சிதமாக செய்வார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

















