Connect with us

வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 976 ஜூனியர் நிர்வாகி காலியிடங்கள் – கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு!

Published

on

மத்திய அரசு வேலைவாய்ப்பு – இந்திய விமான நிலைய ஆணையத்தில் 976 ஜூனியர் நிர்வாகி பணியிடங்கள்

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) பல்வேறு பிரிவுகளில் ஜூனியர் நிர்வாகி (Junior Executive) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 976 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியின் பிரிவுகள் மற்றும் காலிப்பணியிடங்கள்:

  • ஜூனியர் நிர்வாகி (Architecture) – 11

  • ஜூனியர் நிர்வாகி (Engineering Civil) – 199

  • ஜூனியர் நிர்வாகி (Engineering Electrical) – 208

  • ஜூனியர் நிர்வாகி (Electronics) – 527

  • ஜூனியர் நிர்வாகி (Information Technology) – 31
    மொத்தம்: 976

வயது வரம்பு:
27.09.2025 தேதியின்படி அதிகபட்ச வயது 27.

  • எஸ்சி/எஸ்டி: 5 ஆண்டு தளர்வு

  • ஓபிசி: 3 ஆண்டு தளர்வு

  • மாற்றுத்திறனாளிகள்: 10 ஆண்டு தளர்வு

கல்வித் தகுதி:

  • கட்டிடக்கலை, சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், டெலி கம்யூனிகேஷன் போன்ற பிரிவுகளில் பட்டப்படிப்பு.

  • தகவல் தொழில்நுட்ப பிரிவில் கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

  • 2023, 2024, 2025 ஆண்டுகளில் கேட் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:
₹40,000 – ₹1,40,000 (குரூப்-பி)

தேர்வு முறை:

  • கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு.

  • சம மதிப்பெண் வந்தால் வயது முன்னுரிமை, அதிலும் சமம் என்றால் டிகிரி மதிப்பெண்கள் முன்னுரிமை.

விண்ணப்பிக்கும் முறை:

  • அதிகாரப்பூர்வ இணையதளம்: AAI Careers

  • கட்டணம்: ₹300 (SC/ST/பெண்கள்/மாற்றுத்திறனாளிகள்/பயிற்சி பெற்றவர்கள் விலக்கு)

  • விண்ணப்ப தொடக்கம்: 28 ஆகஸ்ட் 2025

  • கடைசி தேதி: 27 செப்டம்பர் 2025

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Remain indexed, building backlinks and getting your website cited on other sites for both your seo and geo..